தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சூழல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவானது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சூழல் பிரச்சனைகள் தொடர்பில் அடிப்படை மற்றும் பிரயோக ஆய்வுகளை மேற்கொண்டு சூழல் தரம் தொடர்பிலான இடர் பற்றிய தீர்வுகளை முன்வைக்கிறது. மேலும் சுற்றாடல் முகாமைத்துவம் தொடர்பிலான தரவுகளும் இந்த ஆய்வுகள் மூலம் சேர்க்கப்பட்டு தீர்மானம் மேற்கொள்ளுவதற்கு பயன்படுத்தப்படுகின்றன. இப்பிரிவில் பல்துறை சார்ந்த நிபுணர்கள் பணியாற்றுவதால் பல்வேறு வகையான ஆய்வுகளை மேற்கொள்ளுவது இலகுவாக உள்ளது.

ஆய்வுகளின் பொருட்டான கூட்டமைப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்த தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சூழல்
கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவானது அப்பிரிவின் பணியெல்லைக்குள் ஆய்வுகளை மேற்கொள்ள விரும்புவோருடன்
கைகோர்க்க எந்த நேரமும் தயாராகவுள்ளது.

சூழல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவானது பட்டதாரி மற்றும் முதுமானி ஆய்வாளர்களை உள்வாங்கி அடுத்த தலைமுறை ஆய்வாளர்களை வளர்ப்பதிலும் பிரதான பங்காற்றி வருகிறது.

 

நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஆய்வுகள்
• மனித காரணிகளால் நீரியல் வளங்களின் சுகாதார தன்மை பாதிப்படைதல் தொடர்பான ஆய்வு
• இரசாயன அனர்த்த இடர்
• RMV செயற்த்திட்டம்
• இலங்கையிலுள்ள அனர்த்த இடர்கள்
• நகர வாயு மாசடைதல்

 

முன்மொழியப்பட்டுள்ள ஆய்வு விடயப்பரப்புக்கள்
• நீரின் தரம்
• ஓடை வடிகால் பரப்பு முகாமைத்துவம்
• நீர் நிலைகளின் தன்மயமாக்க இயலுமையை மதிப்பிடுதல்
• நீர் நிலைகளின் சத்து செறிவுநிலை
• சூழல் நிலைதகு அபிவிருத்தி மற்றும் முறைமை முகாமைத்துவம் தொடர்பில் தொழில்நுட்ப வழிகாட்டல் ஆவணங்களை தயாரித்தல்
• காலநிலை மாற்ற பாதிப்புக்கள் மற்றும் நீர் பாதுகாப்பு
• நகர வாயு தரம்
• காலநிலை மாற்ற பாதிப்புக்கள் மற்றும் சூழல் தரம்
• கைத்தொழில் இரசாயன அனர்த்த இடர் மதிப்பீடு
• தீங்குதரு பொருட்களின் இடர்

 

ஆய்வு வாய்ப்புக்கள் தொடர்பில் கலந்துரையாட அழைக்க வேண்டியோர்;

திருமதி. எஸ்.வி. டயஸ்
பணிப்பாளார்

திரு. எச். டி. எஸ். பிரேமசிறி
இணைப்பாளார்/சிரேஸ்ட விஞ்ஞானி
வாயு தர கற்கைகள்

திருமதி. எஸ்.ஏ.எம்.எஸ். திஸாநாயக்க
இணைப்பாளர்/சிரேஷ்ட விஞ்ஞானி
நிலம் மற்றும் நீர் தர கற்கைகள்