இப்பிரிவின் கீழ் உள்ள சூழல் ஆய்வுகூடம் 1987ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டதாகும். இவ்வாய்வு கூடத்தில் சுற்றுப்புற நீர்,
கழிவு நீரின் பௌதிகவிரசாயனதத்துவம் மற்றும் நுண்ணுயிரியல் சிற்றலகு, சுற்றுப்புற வளியின் தரம், வாயு மற்றும் அதிர்வு
ஆகியன தொடர்பில் பரிசோதனை மேற்கொள்ளும் வசதிகள் காணப்படுகின்றன.

இந்த ஆய்வு கூடம் UNDP/UNCHS இனால் SLR/84/036 கீழ் கிடைத்த அனுசரணையால் வழங்கப்பட்டது. இந்த செயற்த்திட்டத்தின்
கீழ் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப அலுவலகர்களுக்கு ஐக்கிய இராச்சியத்தின் லௌப்றௌ பல்கலைக்கழகத்தை ( Loughbrough University) சேர்ந்த நிபுணர்கள் மற்றும் உள்ளூர் நிபுணர்களினால் பயிற்சியும் வழங்கப்பட்டது.

தற்போதைய நிலை
சூழல் ஆய்வுகூடமானது நவீன வசதிகள், அதி நவீன உபகரணங்கள் மற்றும் நிபுணத்துவமும் ஊக்கமும் கொண்ட ஊழியர்களையும் கொண்டுள்ளது. இதன் மூலம் சேவையுறுனர்களுக்கு அவசியமான பகுப்பாய்வு சேவைகளை இவ்வாய்வு கூடம் தொடர்ச்சியாக வழங்கிவருகிறது.

இந்த ஆய்வுகூடம் குடிநீர், கழிவு நீர், நில மேற்பரப்பு மற்றும் நிலக்கீழ் நீர், மண், அடையல்கள், நிர்மாண மூலப்பொருட்கள், சேறு, வாயு தர கண்காணிப்பு, ஒலி மற்றும் அதிர்வு பரிசோதனை உள்ளிட்ட தொடர்பிலான பல்வேறு ஆய்வு கூட சேவைகளை வழங்குகிறது. இவ்வாய்வு கூடமானது சர்வதேச மற்றும் உள்ளூர் சூழல் நியமங்கள் தொடர்பில் அனுபவமிக்க சிரேஷ்ட அலுவலகர், தகுதியான பகுப்பாய்வாளார்கள் மற்றும் நிபுணர்கள் ஆகியோரை கொண்டுள்ளது. அதுமட்டுமின்றை சேவையுறுனர்களின் தேவை மற்றும் ஆய்வுகூட வளங்கள் ஆகியவற்றுக்கு ஏற்ப சேவைகளை வழங்கும்
திறமையை இவ்வாய்வு கூடம் கொண்டுள்ளது.

இந்த சூழல் ஆய்வுகூடமானது மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் கீழ் கழிவு நீர் பரிசோதனை, ஒலி, வாயு மற்றும் அதிர்வு மட்டங்கள் தொடர்பிலான பரிசோதனைகள் தொடர்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

சூழல் பயிற்சி மற்றும் விழிப்புணர்வு
ஆய்வுகூடமானது பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்துறையை சேர்ந்த அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு சூழல் தர கண்காணிப்பு, மதிப்பீடு மற்றும் முகாமைத்துவம் ஆகியன தொடர்பான பயிற்சிகளை அடிக்கடி வழங்கி வருகிறது.

 

தரத்தை உறுதிப்படுத்துவது தொடர்பிலான எமது ஈடுபாடு
ஆய்வுகூடங்களுக்கு இடையில் நடாத்தப்படும் பகுப்பாய்வு இயலுமையை விருத்தி செய்யும் போட்டிகளில் இந்த ஆய்வு கூடமும் தொடர்ச்சியாக பங்கேற்று வருகிறது. மேலும் தரத்தை உறுதி செய்யும் நடைமுறைகளை அமுல்ப்படுத்தி வருகின்ற அதேவேளை ISO 17025:2005 நியமத்தை அடிப்படையாக கொண்டு தரநிர்ணய சான்றிதழை பெற்றுக்கொள்ள முனைப்புக்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.