புவித்தொழில்நுட்ப பொறியியல் பிரிவு மண் எந்திரவியல், பொறியியல் நிலவியல், அத்திவார வடிவமைப்பு, மண்சரிவு தணிப்பு மற்றும் ஆராய்ச்சி போன்ற நாட்டிற்கு அவசியமான துறைகளில் சேவைகளை வழங்குகிறது. மேலும் நிர்மாண துறைக்கு அவசியமான புவித்தொழில்நுட்ப சேவைகளையும் வழங்கிவருகிறது. மேலும் நிர்மாண கைத்தொழில் துறையில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அவசியமான துறைகளை இனம்கண்டு உரிய சேவைகளை வழங்கல்.

புவித்தொழில்நுட்ப சேவைகள் வழங்கும் முன்னணி நிறுவனம் எனும் அடிப்படையில் நாட்டில் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களால் நடைமுறைப்படுத்தப்படும் பாரிய செயற்திட்டங்களுக்கு எம்மாலான பங்களிப்பை வழங்கியுள்ளோம். அனுபவம் வாய்ந்த புவித்தொழில்நுட்ப பொறியியலாளர்கள், பொறியியல் நிலவியல் நிபுணர்கள், விஞ்ஞானிகள், துளையிடும் மேற்பார்வையாளர்கள், துளையிடுபவர்கள் மற்றும் பயிற்றப்பட்ட உதவுபவர்கள் ஆகியோரை கொண்ட எமது நிபுணர் குழு புவித்தொழில்நுட்ப மற்றும் புவிப்பௌதீகவியல் ஆய்வுகளை மேற்கொள்ள கூடிய நவீன உபகரணங்களை கொண்டு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அவசியமான சேவைகளை வழங்கிவருகிறது.

மேலும் சர்வதேச தரத்திலான மண் பரிசோதனைகளை மேற்கொள்ளக்கூடிய ஆய்வுகூடம் மற்றும் நிபுணத்துவம் வாய்ந்த அலுவலர்கள் புவித்தொழில்நுட்ப பிரிவிடம் காணப்படுகின்றனர்.

கீழ் குறிப்பிடப்பட்டுள்ள செயற்த்திட்ட குறிப்புக்கள் எமது சேவைகள் தொடர்பான விபரங்களை சுருக்கமாக விளக்குகின்றன.

துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஆகியவற்றினால் இணைந்து நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த செயற்திட்டத்தில் துளைக்குழி தொடர்பான ஆய்வுகள் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தால் கொடகம முதல் அந்தரவேவ வரை மேற்கொள்ளப்பட்டது.

 

துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் செயற்படுத்தப்பட்ட மண்சரிவு அனர்த்த பாதுகாப்பு செயற்த்திட்டத்திற்கு ஜப்பானிய சர்வதேச ஒத்துழைப்பிற்கான அமைப்பு நிதியுதவி அளித்தது. இந்த செயற்திட்டம் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் நடைமுறைப்படுத்தப்பட்டது. மேலும் தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் நிபுணத்துவ உதவி ஓறியண்டல் ஆலோசகர்களின் நிறுவனத்தால் வழங்கப்பட்டது.

அதனடிப்படையில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அனர்த்த பாதுகாப்பு செயற்திட்ட ஆலோசகர் குழுவால் துளையிடல், ஆய்வுகூட பரிசோதனைகள், புவிபௌதிகவியல் ஆய்வுகள், கண்காணிப்பு கருவிகளை பொருத்தல் (நீட்சி அளவுமானி (Extensometers), துளைக்குழி விட்டமானி (Pipe strain gauges), விகல அளவி (Pipe strain gauges), துளைக்குழி விட்டமானி (Borehole inclinometers) மற்றும் நிலக்கீழ் நீர்மட்ட அளவுமானி (Groundwater level gauge) மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளல் போன்ற நடவடிக்கைகளுக்காக துணை ஆலோசகர் நிறுவனமாக சேர்த்துக்கொள்ளப்பட்டது.

 

தியத்தலாவ பஸ் தரிப்பிட பகுதியில் அண்மையில் நிறைவு செய்யப்பட்ட செயற்த்திட்டத்திற்கு மண் துளையிடல் தொடர்பான தொழில்நுட்ப ஆலோசனைகளை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்தது.

மலையக பகுதிகளில் ஏற்படும் மண்சரிவு காரணமாக பாரிய இழப்புக்கள் மற்றும் பொருளாதார பாதிப்புக்கள் என்பன ஏற்படுகின்றன. மண்சரிவு அனர்த்தத்தை தணிக்கும் பொருட்டு புவித்தொழில்நுட்ப பொறியியல் பிரிவு கிடையான ஈர்ப்பு வடிகால் (Horizontal Gravity Drains) முறையினை புஞ்சி ரத்தோட்டை, கரந்தியெல மற்றும் கொக்மாதுவ மண்சரிவு பகுதிகளில் அறிமுகம் செய்துள்ளது. இக்கிடையான ஈர்ப்பு வடிகால்கள் மண்சரிவு பகுதிகள் மற்றும் பலமற்ற சாய்வு பகுதிகளில் நிலக்கீழ் நீர் மட்டத்தினை குறைப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.

மண்சரிவு தணிப்பு செயற்த்திட்டங்களில் மண்சரிவு ஆராய்ச்சி மற்றும் இடர் முகாமைத்துவ பிரிவுடன் இணைந்து புவித்தொழில்நுட்ப பொறியியல் பிரிவு இனம்காணப்பட்ட மண்சரிவு ஆபத்துள்ள பகுதிகளின் இடரை தணிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றது. வவேகம வைத்தியசாலை, கொட்டகஹராவ, குருகுடேகம, பின்னவல, பின்னராவ, கம்பளை ஆகிய பகுதிகளில் அரசாங்கத்தின் மானியத்தை கொண்டு  தாக்கவிளைவுள்ள சமூகத்தின் இடரை குறைக்கும் செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டன.

சேவையுறுனரால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய ஊழியர் சேமலாப நிதிய செயலகத்துக்கென இரு அடித்தள மாடிகளுடன் 32 மாடி கட்டிடம் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. எமது நிறுவனத்தின் நிபுணர்களால் புவித்தொழில்நுட்ப ஆய்வுகள் மற்றும் நிலக்கீழ் தன்மைகள் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு நிர்மாணம் தொடர்பிலான் முன்மொழிவுகள் வழங்கப்பட்டன.